RETREAT

Center Gradient Transparent

“BLESSED ARE THOSE WHO HUNGER AND THIRST FOR RIGHTEOUSNESS, FOR THEY SHALL BE SATISFIED”
– MATHEW 5:6

218.jpg

DIRECTOR'S MESSAGE

இறைவார்த்தையின் வல்லமையினால் பங்குகளை ஆன்மீக வாழ்வில் புதிப்பதற்காக புனித வின்சென்டியார் பாப்புலர் மிஷன் தியானத்தை தொடங்கினார். அவரது காலடிகளை பின்பற்றி வின்செந்தியன் சபை பாப்புலர் மிஷன் தியானத்தை பலமொழிகளில் நடத்தி வருகிறது. 250-க்கும் மேற்பட்ட தியானமானது இதுவரை (2005-2018) தமிழகத்தில் பல மறைமாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்த தியானதித்தின் வழியாக ஆண்டவர் இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும், அவர் தருகின்ற ஒப்புரவையும் குடும்பமாக அனுபவிக்க உறுதுணையாக அமைகிறது. இறைவார்த்தை பகிர்வின் வழியாகவும், பல விதமான வழிபாடுகள் வழியாகவும், பங்கிலுள்ள குழந்தைகள், இளைஞர் - இளம்பெண்கள், தம்பதியர், முதியவர்கள் என அனைத்து நிலையினரையும் இறைபிரசன்னத்திற்குள் கொணரவும் அருள் அடையாளங்களை சுவைக்கவும் துணை செய்கிறது. இந்த இறைவார்த்தை பெருவிழாவினை உங்கள் பங்குகளில் கொண்டாட இறைவன் அருள்கூர்வராக .

director1.jpg

St. Vincent De Paul initiated popular mission retreats to renew the spiritual ambience in the parishes through the rays of the word of God. Following the footsteps of that great Saint, the Vincentian Congregation has undertaken popular mission retreats in various languages. By the grace of God and by the powerful intercession of St. Vincent De Paul, vincentian fathers were able to conduct more than 250 retreats (from 2005-2018) in most of the dioceses of Tamil Nadu. Popular mission retreat embraces the faithful to the love, mercy and the forgiveness of our loving Lord. Through the breaking of the word of God and through various sessions, people are drawn to the presence of the Lord and to the sacramental life. May the Lord pour His heavenly graces upon you to experience the festival of the Word in your parishes.


With prayers & blessings
Fr. William John Bosco VC, Director, popular mission Retreat, Trichy

 

ASSOCIATE DIRECTOR'S MESSAGE

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றி வந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார். விண்ணரசை பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார் (மத்தேயு-9:35)

“Evangelizare Pauperibus” ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பு என்பதே வின்செந்தியா சபையின் குறிக்கோளாக இருக்கிறது. இந்தக் குறிக்கோளை அடிப்படையாகக்

WhatsApp Image 2021-04-21 at 12.15.12 PM.jpeg

கொண்டும், எங்களின் விண்ணக பரிந்துரையாளரான புனித வின்சென்ட் - தே - பவுல் அவர்களின் அடிச்சுவுடுகளைப் பின்பற்றியும் நற்செய்தியை இறைமக்களுக்கு எல்லா விதங்களிலும் பறைசாற்ற முனைகின்றோம். உயிருள்ள இறைவனின் வார்த்தைகளை வல்லமையோடு இறைமக்களுக்கு எடுத்துரைக்க எல்லாம் வல்லவர் எங்களை ஆசிர்வதித்துளார். பாப்புலர் மிஷன் தியானம் என்னும் இந்த ஒரு வகை தியானத்தின் வழியாக வின்செந்திய குருக்களாகிய நாங்கள் இறைமக்களை அவர்களின் பங்குத்தளங்களிலும், பகுதியிலும், சூழ்நிலைகளிலும் சந்திக்கின்றோம். 

ஒவ்வொரு கத்தோலிக்க திருச்சபை அங்கத்தினரின் கிறிஸ்தவ வாழ்வை புதுப்பித்தல், தனிமனித வாழ்வின் பல்வேறு நிலைகளைத் தொடுதல் போன்றவைகளே இந்த பாப்புலர் மிஷன் தியானத்தின் முக்கிய கவனமாக திகழ்கின்றது. இந்த தியானம் வழியாக ஒவ்வொரு தனிமனித வாழ்வும் புதிய உணர்வையும், எழுச்சியையும் பெறுகிறது. குடும்ப உறவுகள் உறுதிபெறுகிறது. இறைமக்கள் மிகுந்த ஆனந்தத்தோடு கடவுளின் பலிபீடத்தை வந்தடைய இந்த தியானம் உதவுகிறது. அருட்சாதன வாழ்வில் ஈடுபாடு காண்பிப்பவர்களாகவும், பங்கு ஆலயத்தோடும் சமூகத்தோடும் அதிக ஈடுபாடுள்ள மக்களாகவும் மாறி, புதிய உறுதி தரும் ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர். மக்களுக்கு தங்கள் குடும்பத்தோடும் சமூகத்தோடும் உள்ள கடைமையை இந்த பாப்புலர் மிஷன் தியானம் நினைவூட்டுகிறது.

 போதித்தல், கற்பித்தல்  மற்றும் புனிதப்படுத்துதல் என்கின்ற இந்த மூன்று பண்புகள் இயேசுவின் பணியின் சிறப்பியல்புகளாம். இதுவே பாப்புலர் மிஷன் தியானத்தின் சிறப்பியல்புகளும், இறைவார்த்தையை இறைச்சமூகம் வாழ்கின்ற சூழலுக்கேற்ப எடுத்துரைக்கின்றோம். இறைமக்களுக்கு அடிப்படை மறைக்கல்வியைக் கற்றுக்கொடுப்பதிலும் பல்வேறு வழிபாடுகளின் வழியாக அவர்களின் வாழ்வை புனிதப்படுத்தும் நிலைகளையும் மேற்கொள்கின்றோம்.

 

இந்த தியானத்தின் வழியாக பல மனிதர்களின் வாழ்விலும், பங்குத்தளங்களிலும் நடைபெற்ற எண்ணிலடங்கா அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் நாங்களே சாட்சிகள். இந்த தியானம் மக்களின் இதயத்தை தொடுவதாகவும், அவர்களின் அணுகுமுறைகளிலும் நடத்தைகளிலும் மாற்றங்களை விளைவிக்கக்கூடியதாகவும் மட்டுமல்லாமல் ஒற்றுமையோடும், நல்லிணக்கத்தோடும் அன்போடும் வாழ உதவி செய்கின்றது. பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்பில்லாமல் இந்த தியானம் அதன் குறிக்கோளை அடைவது கடினமானதே. இறைவார்த்தையை அறிவிக்கும் குருக்களிடமிருந்தும், கேட்கும் மக்களிடமிருந்தும் கடின உழைப்பையும் ஆற்றலையும் இந்த தியானம் எதிர்பார்க்கின்றது. இந்த தியானத்தின் வெற்றிக்கு உங்களுடைய உறுதுணை எங்களுக்கு அதிகம் தேவை. எங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்க உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 

 எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

 “Then Jesus went about all the cities and villages, teaching in their Synagogues and proclaiming the good news of the Kingdom, and curing every disease and every sickness.” Mt. 9:35


“Evangelizare Pauperibus”- “Good news to the poor” is the motto of the Vincentian Congregation. Basing on this motto and following the footsteps of our heavenly patron, St. Vincent De Paul, we are spreading the good news to the faithful in all the way possible. Almighty God has blessed us to preach His living Word to the people of God very effectively. Popular Mission Retreat is one such retreat where we, the Vincentian Priests, reach the people in their own parishes, locality and circumstances.

 
The main focus of the Popular Mission Retreat is to renew the life of each member of the Catholic Church and to touch all the aspects of the life of a person. Through Popular Mission Retreat the life of an individual is rekindled and reawakened; the relationships among family members are strengthened; the faithful become more enthusiastic to come closer to the altar of God; they become serious about their sacramental life and they all get a new spirit and deeper attachment to their Parish Church and community. The Popular Mission Retreat reminds the people of their responsibilities to their family and society. 


Preaching, teaching and sanctifying were the triple aspects of Jesus’ Ministry. Those three are the aspects of Popular Mission Retreat too. We are preaching the Word of God according to the context of the parishioners. We teach them the basic catechisms and sanctify their life through different ministries. 


We have witnessed many miracles happening in the life of people and in the parishes after this retreat. It touches the hearts of all and changes their attitude, behaviour and helps them to re establish unity, harmony, love etc.   This retreat cannot be successful without the co operation of the Parish Priest and Parishioners. It requires hard works and energy from both sides: preachers and faithful. We need your support for the success of this retreat. I request your earnest and valuable prayers for this Retreat. May God bless you all and all your undertakings.


With Love & Prayers,
Fr. Lijo Thomas Thakarappillil VC
Associate Director

FORMER DIRECTOR'S MESSAGE

விவிலியத்தில் சில இடங்களில் இயேசுவை மக்கள் புறக்கணிக்கிறார்கள். அவருடைய படிப்பினையை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தன்னுடைய கடமையை செய்ய இயேசுவுக்குத் தடையாக இருந்தது மக்கள் தான். ஆனால் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. வேறொரு ஊரில் சென்று அங்கு நற்செய்தி அறிவிக்கின்றார். மக்கள் இவரை ஏற்றுக் கொள்ளாததற்குக் காரணம் இயேசுவை இவர்கள் கண்டார்கள், ஆனால் அவரைப் பற்றி அறியவில்லை, புரியவில்லை, அவர் மீதும் அவர் வார்த்தையின் மீதும் நம்பிக்கை கொள்ளவில்லை. காரணம் இவர் யார் ஒரு தச்சரின் மகன் தானே என்றெல்லாம்

fomer_director.jpg

முன் சார்பான எண்ணங்களோடு அவரை பார்த்ததனால் வந்த விளைவுகள். நம்மையும் பலர் முன் சார்பு எண்ணங்களோடு எடைபோட்டு இருக்கலாம். இவனைப் பற்றி எனக்கு தெரியாதா? இவளைப் பற்றி எனக்கு தெரியாதா என எண்ணுவார்கள். நம்முடைய செயல்களுக்கு இவர்களே ஒரு தடையாக இருப்பார்கள். இருந்தபோதிலும் நாமும் நம்பிக்கை இழக்காமல் நம்முடைய கடமையை செய்ய வேண்டும். நமக்கு மூன்று விதமான கடமைகள் உள்ளன. 1. தனிப்பட்ட விதத்தில் நமக்கு நாமே செய்யும் சில கடமைகள் 2 . நம்முடைய குடும்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 3. நம்முடைய சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள். தனிப்பட்ட விதத்தில் என்று கூறும் போது முதலில் வருவது இறைவன், கடவுளுக்கு நம்முடைய வாழ்வில் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும் . இதை இணைச்சட்டம்5:7 ல் பார்க்கிறோம். முதலில், கடவுள் தந்த 10 திருச்சபைக் கட்டளைகளையும் நாம் நம்முடைய வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய குடும்பத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று பார்க்கும் போது நீங்கள் ஒரு கணவனாக இருந்தால் அல்லது மனைவியாக இருந்தால் திருமணத்தின்போது கொடுத்த வாக்குறுதியை காக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் விசுவாசமாக இருந்தால் தான் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள். மூன்றாவதாக நம்முடைய சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை என்னவென்று நாம் பார்க்கும்போது சமுதாயத்தில் நம் கண்ணெதிரே நடக்கக் கூடிய அநீதிகளைத் தட்டிக் கேட்க கடமைப் பட்டுள்ளோம். கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் நாம் இயேசுவைப் பின்பற்றுவோம். தனிப்பட்ட விதத்தில் அவர் தம் கடமையை ஆற்றுவார். அது தான் மீட்பு. தன்னுடைய சிலுவை சாவின் மூலம் அதை நிறைவேற்றினார். யோவான்19:30 ல் “எல்லாம் நிறைவேறிற்று என்று கூறி தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்”. குடும்பத்தில் பார்க்கும் போது இயேசு தம் சீடர்களுக்கு சொல்லி கொடுக்கிறார் . மூன்று வருட காலம் சீடர்கள் யேசுவுடனே இருந்து கற்றுக்கொள்கிறார்கள். இறுதியாக சமுதாயத்தில் பார்க்கும்போது அநீதிகளை தட்டி கேட்கின்றார். ஆகவே நாமும் இயேசுவைப் போல நம்முடைய கடமைகளை ஆற்ற வரம் கேட்போம்.

In Bible we could see, the people rejected Jesus.They refused to accept HIS teachings.These people were the obstacles for Jesus not to do HIS duty. Yet Jesus never gave up hope.He went to another place and preached the gospel. The reason why they did not accept Jesus was that they saw HIM but neither knew HIM nor understood HIM. They neither believed HIM nor HIS word. Reason, they had the predomination on JESUS that he was just a son of carpenter. in our life too, people around us may have predominations on us and may hinder(supress) our actions. Yet we should not give up hope but continue our duties. We have three duties to do. 1. Personal duty, 2. Duty to our family, 3. Duty to our society. When we see the personal duty it is nothing but as we read in (Deu5:7) the PRIORITY TO GOD. in our life. Second comes the duty to our family. Being a husband or wife you must keep up the promise which you gave during your marriage to your spouse. Your children will be trustworthy to you, only when you are trustworthy to your spouse. third comes the duty to our society. we must be ready to raise our voice when we come across any injustice or iniquity in our society. Jesus taught us how to do all these three duties. First of all,being Christians, let us follow the footsteps of Jesus. Jesus will act in a specific way. That is what actual salvation, HE has fulfilled with the crucification.HE has surrendered HIS soul to the FATHER by saying "everything fulfilled" (John19:30). Jesus has taught his disciples & they were with HIM for 3 years & learnt.the same we need to be with Jesus learn how to live in our family. Finally Jesus was questioning the society whenever he came across any injustice or inequity. Hence let us pray GOD to bless us to live as JESUS to do our duties.


With prayers & blessings
Rev.Fr.Raphael Koothur VC

retreat-procedure.jpg

PROCEDURE

“JESUS WENT FROM THERE TO THE REGION OF JUDEA AND BEYOND THE JORDAN; CROWDS GATHERED AROUND HIM AGAIN, AND, ACCORDING TO HIS CUSTOM, HE ONCE MORE BEGAN TO TEACH THEM” – MARK10:1

  Note:

    This retreat is only for the parish community
   It is from Sunday to Friday
  

Timing
  Sunday 5 PM to 8.30 PM
  Monday to Friday: Morning 6 AM to 7.30 AM,
Evening 6 PM to 9.30 PM


 

 

BOOKING

“CALL TO ME AND I WILL ANSWER YOU, AND WILL TELL YOU GREAT AND HIDDEN THINGS THAT YOU HAVE NOT KNOWN” – JEREMIAH 33:3


Popular mission retreat can be booked only through the Parish priest

booking.jpg
 
pmrtn_logo.png

PMR Logo

 

PMR Flag

pmrtn_flag_edited.jpg
 

PMR Notice

 

PMR RETREATS